வடமாகாணத்தில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு ; நோயாளர்கள் சிரமம்

0
774
Northern Province Doctors strike

(Northern Province Doctors strike)
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தவிர்ந்த வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டள்ளது.

இன்று காலை முதல் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவுகள் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை.

வடக்கு மாகாணத்தில் பணிபுரியும் வைத்தியர்களுக்கு மாத்திரதே அவை வழங்கப்படவில்லை என்றும் இதனை வழங்குமாறு வலியுறுத்தியே இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் வடமாகாணத்தில் வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Northern Province Doctors strike