இரணைதீவு மக்களை சந்தித்தார் வடக்கு முதலமைச்சர்

0
668
Northern Province Chief Minister meet iranaitivu people

(Northern Province Chief Minister meet iranaitivu people)
இரணைதீவுக்கு விஜயம் செய்த வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இரணைதீவில் தாமாக மீள்குடியேறியிருக்கும் மக்களுக்கு உணவு பொதிகளை வழங்கியுள்ளார்.

இரணைதீவை மீள்குடியேற்றத்திற்கு விடுவிப்பதாக உறுதியளித்த அரசாங்கம், அந்த உறுதிமொழியை காப்பாறாத நிலையில், மக்கள் தாமாகச் சென்று மீள்குடியேறியுள்ளனர்.

இந்த நிலையில் வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலருடன் இரணைதீவுக்கு சென்ற வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், மக்களுடைய குறைகளை கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன், சுமார் 80 குடும்பங்களுக்கு தலா 2500 ரூபாய் பெறுமதியான உணவு பொதிகளையும் வழங்கி வைத்துள்ளார்.

இதேவேளை, கடந்த வாரம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இரணைதீவு மக்களைச் சென்று சந்தித்ததுடன், அங்கு சிரமதானப் பணிகளையும் மேற்கொண்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

வடக்கு மாகாண அமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பொ.ஐங்கரநேசன், பா.கஜதீபன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் ஆகியோரும் முதலமைச்சருடன் இரணைதீவுக்குச் சென்றுள்ளனர்.

இரணை தீவு மக்கள் போர் காலப்பகுதியான 1992ஆம் ஆண்டு கடற்படையினரால் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக கிளிநொச்சி இரணை மாதா நகரில் வசித்து வருகின்றனர்.

தமது வாழ்வாதாரத் தொழிலான கடற்றொழிலை முழுமையாக முன்னெடுக்க முடியாது அந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்தனர்.

இந்த நிலையில் இரணைதீவிலுள்ள தமது பூர்வீக காணிகளில் மீள்குடியமர அனுமதிக்குமாறு வலியுறுத்தி அந்த மக்கள் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் ஒராண்டு நிறைவான கடந்த மாத இறுதியிலிருந்து அந்த மக்கள் இரணை தீவில் தங்கியிருந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Northern Province Chief Minister meet iranaitivu people