{ members Election Commission resign }
மலேசியா: நாட்டின் 14-ஆவது தேர்தலின் போது, ஜனநாயகத்தை மறுக்கும் வகையில் பல்வேறான முயற்சிகளில் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் ஈடுபட்டதால், அந்த ஆணையத்தின் ஏழு தலைவர்களும் உடனடியாக தங்களின் பதவியிலிருந்து வெளியேற வேண்டும் என்று பெர்சே 2.0 அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அந்த ஏழு ஆணையர்களும், பதவி விலக மறுக்கும் பட்சத்தில், அவர்கள் நீக்கப்பட வேண்டும் என்று பெர்சே 2.0 அமைப்பின் தலைவர் ஷாரூல் அமான் கூறியுள்ளார்.
“அவர்கள் நீக்கப்படாவிடில், நிறுவனங்கள் மீதான மாற்றத்திற்கான மக்களின் கோரிக்கை ஏதோ ஒரு வகையில் செயல் முடியாமல் போய்விடும்” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.
தேர்தல் தினத்தன்று, பல்வேறான முறைகேடுகள் நிகழ்த்தப்பட்டதாகவும், அதனை பெர்சே மற்றும் பெமந்தாவ் உறுப்பினர்கள் நேரிடையாக கண்டதாகவும் ஷாரூல் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையத் தலைவர்கள் பதவி விலக வேண்டும் என்று தாங்கள் கோரிக்கை விடுப்பதாக அவர் தெளிவுப் படுத்தியுள்ளார்.
“தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. பல்வேறான முறைகேடுகள் நிகழ்த்தப்பட்டன. நாணயத்தை அடிப்படையாக கொண்டு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம்,நேர்மையை கடைப்பிடிக்கவில்லை” என்று மேலும் அவர் கூறியுள்ளார்.
Tags: members Election Commission resign
<< RELATED MALAYSIA NEWS>>
*நஜிப் ஆட்சியில் மறைக்கப்பட்ட 1எம்டிபி ஊழல் மகாதீரின் ஆட்சியில் வெடித்து வெளிவருகின்றது..!
*புதிய நாடாளமன்றத்துடன் பணியைத் துவங்கினார் அஸ்மின் அலி..!
*பினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் சவ் கோன்..!
*நஜிப் மீது முன்னாள் எம்.எ.சி.சி. உயர் அதிகாரி புகார்!
*புதிய மலேசிய பிரதமர் மகாதீர் அமைச்சர்களுடலான சந்திப்போடு பணியைத் தொடங்கினார்..!
*ஜிஎஸ்டி வரி தொடர்பில் வெளியானது பொய் செய்தியா..?
*எஸ்.பி.ஆர்.எம். தலைவர் சூல்கிப்ளி அஹ்மாட் இன்று பதவி விலகினார்!
*பிகேஆர் கட்சியில் சேர்ந்தார் 22 வயதுடைய இளம் எம்.பி. பிரபாகரன்..!
*நஜிப்பின் உறவினர் வீட்டில் போலீஸ் அதிரடிச் சோதனை!
*அன்வார் செவ்வாய்க்கிழமை விடுதலை!
<<Tamil News Groups Websites>>