வடக்கில் அரபு நாட்டின் நிதியுதவியுடன் தமிழ் மக்களின் காணிகளை ஆட்டையை போடும் முஸ்லிம்கள்!

0
1222
Mannar Musali Divisional Secretariat Muslim Land Issue

(Mannar Musali Divisional Secretariat Muslim Land Issue)

வடக்கு மாகாணத்தில் யுத்தத்தின் பின்னர் முஸ்லிம் குடும்பங்கள் மீள் குடியேற்றப்படும் விவகாரத்தில் அமைச்சர் ரிஷாட் தலைமையிலான குழுவினர் தொடர்ச்சியாக கடைப்பிடித்துவரும் சட்டவிரோத போக்கு தொடர்பில் ஏற்கனவே நெற்றிக்கண் செய்திப்பிரிவு பல தடவை செய்திகளை பிரசுரம் செய்திருந்தது.

இந்த சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பில் கவனமெடுக்கவேண்டிய வடக்கு மாகாண சபை மௌனம் காத்து வரும் நிலையில் முல்லைத்தீவு , மன்னார் மாவட்டங்களில் நிலைமை கைமீறி சென்றுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொக்குப்படையான் கிராம மக்களுக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் விவசாய காணியில் அரபு நாட்டின் நிதி உதவியுடன் வேறு கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட மக்களை குடியேற்றம் செய்ய கடந்த சனிக்கிழமை விட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொக்குப்படையான் கிராம மக்களுக்கு முசலி புதிய பேரூந்து தரிப்பிடத்திற்கு பின்னால் சுமார் 15 ஏக்கர் விவசாய காணி காணப்படுகின்றது.

குறித்த கிராம மக்கள் 1990 ஆம் ஆண்டு நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து சென்று மீண்டும் 10 வருடங்களில் பின் குறித்த கிராமத்தில் குடியேறியுள்ளனர்.

இதன் போது சிறிலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சிலரது காணி உரிமங்கள் தவறவிடப்பட்ட போதும்,பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் காணி ஆவணங்கள் வழங்கப்பட்டது.

குறித்த காணியில் கொக்குப்படையான் கிராம மக்கள் விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த காணியில் அரபு நாட்டின் நிதி உதவியுடன் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வேறு கிராம அலுவலகர் பிரிவில் வசித்து வரும் மக்களை மீள் குடியேற்றும் வகையில் கொக்குப்படையான் கிராம மக்களுக்குக்ச் சொந்தமான குறித்த விவசாய காணியில் சுமர் 45 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் ஒன்றை அமைப்பதற்கு கடந்த சனிக்கிழமை எல்லையிடப்பட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றுள்ளளதாக அந்த மக்கள் விசனம் தெரிவித்தனர்.

காணிக்குரிய ஆவணங்கள் உள்ளவர்களுக்கு காணியினை நீதியான முறையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான காணி அபகரிப்புகள் பரவலாக இடம்பெற்றுவருகின்ற போதிலும் , வடக்கு மாகாண சபை முதல்வர் இது தொடர்பில் தொடர்ந்தும் பாராமுகமாக உள்ளமை மிகவும் கவலைக்குரியது.

வடக்கு மாகாண சபையினரே , மற்றும் வடக்கின் அரசியல் வாதிகளே , இந்த விடயம் தொடர்பில் சரியான கவனம் செலுத்த தவறும் பட்சத்தில் மன்னார் மற்றும் முல்லைத்தீவை முஸ்லிம் இனத்தவரிடம் தாரை வார்த்து கொடுத்த வரலாற்று தவறுக்கு நீங்களும் துணைபோனவர்கள் ஆவீர்கள்.

ஆகையால் நிலைமை உணர்ந்து சரியான ஒருங்கிணைப்புடன் கூடிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நெற்றிக்கண் கோரிக்கை விடுகின்றது.

ஏனைய செய்திகள்

பிரபாகரன் என்னும் ஒற்றை சொல்லில் ஒளிந்திருக்கும் மாற்ற முடியாத தலைமைத்துவம்!

கருணாவின் காட்டி கொடுப்புக்கு கூட்டி கொடுத்த அலிசாஹிர் மௌலானாவுக்கு கிடைத்த பரிசு!

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

பிற தளங்கள்

Tamilworldnews.com

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு