100 புள்ளிகளை பெற்று வரலாற்று சாதனை படைத்தது மென்செஸ்டர் சிட்டி!

0
190
man city vs southampton premier league final match

(man city vs southampton premier league final match)

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டித் தொடரில் அற்புமதமாக விளையாடிய மென்செஸ்டர் சிட்டி அணி, பிரீமியர் லீக் வரலாற்றில் மொத்தமாக 100 புள்ளிகளை பெற்ற ஒரே அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

94 புள்ளிகளுடன் இருந்த மென்செஸ்டர் சிட்டி அணி இதற்கு முன்னைய போட்டியில் பிரைட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 97 புள்ளிகளை பெற்று, பிரீமியர் லீக் தொடரில் அதிக புள்ளிகளை எடுத்த அணி என்ற சாதனையை படைத்தது.

இதற்கு முன்னர் கடந்த 2004-05 சீசனில் செல்ஸி அணி 95 புள்ளிகளை பெற்றிருந்தது. இதுவே பிரீமியர் லீக்கின் அதிக புள்ளிகள் சாதனையாக இருந்தது.

எனினும் குறித்த சாதனையை முறியடித்த மென்செஸ்டர் சிட்டி அணி, இன்று நடைபெற்ற போட்டியில் சௌதெம்டன் அணிக்கெதிரான இறுதிப்போட்டியை 1-0 என வென்று 100 புள்ளிகளை பெற்று சாதனைப்படைத்தது.

இந்த போட்டியின் கோலை மென்செஸ்டர் சிட்டி அணியின் ஜெசஸ் 94வது நிமிடத்தில் அடித்து, சாதனைக்கு வழிவகுத்தார்.

<<Tamil News Group websites>>