எரிபொருள் விநியோகிக்காத 10 நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0
619
Legal action 10 fuel stations

(Legal action 10 fuel stations)
முறையான கட்டமைப்பின்படி எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றதா என நடத்தப்பட்ட சோதனைகளில் நாட்டில் பல பிரதேசங்களிலுள்ள 10 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், முறையான கட்டமைப்புக்கு எதிராக செயற்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எரிபொருள் நிரம்பும் நிலையங்களில் இடம்பெறுவதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை அடுத்து, நுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் அந்தச் சபையின் தலைவர் ஹசித திலகரட்ன தெரிவித்துள்ளார்.

திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 54 எரிபொருள் நிரப்பு நிலையங்களில், பத்து நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பாணந்துறை, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், அலவதுகொடை, பொலநறுவை ஆகிய பிரதேசங்களில் எரிபொருள் இல்லை என அறிவித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

எதிர்காலத்திலும் இவ்வாறான ஏமாற்று நடவடிக்கைகள் நடைபெறாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Legal action 10 fuel stations