கோத்தபாயவே ஜனாதிபதி வேட்பாளர் : 2 ஆண்டுகளுக்கு முன்னவே தீர்மானித்து விட்டோம்

0
661
gotabaya rajapaksa president candidate

(gotabaya rajapaksa president candidate)
கோத்தபாய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தீர்மானம் தம் மத்தியில் இருந்ததாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ரணில் எதிர்ப்பு அணியாக செயற்படும் குழுவின் பாரளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஏனைய கட்சிகளை ஒன்றிணைத்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபஷவை களமிறக்க ஆலோசித்து வருகின்ற நிலையில் பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டுக்கான தலைமைத்துவம் குறித்து பலர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். தற்போதுள்ள அரசியல் சூழலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பெயர் அதிகமாக கலந்தாலோசிக்கப்பட்டு வருகின்றது.

சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள், தூதரகங்களில் கூட இன்று கோத்தபாய ராஜபக்ஷ குறித்து கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இலங்கையில் எதிர்கால தலைமைத்துவத்தை ஏற்றுகொள்ள பொருத்தமானவர் என நானும் இன்னும் பலரும் எமது கட்சிக்குள் தெரிவித்துள்ளோம்.

எனினும் அன்று பலர் இந்தக் கருத்துக்களை எதிர்த்தனர். இராணுவ தலைமைத்துவம் என்ற விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் அவர்கள் அனைவருமே இன்று எமது கருத்தினை ஏற்றுகொள்ளும் நிலை உருவாகியுள்ளது என்றார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags:gotabaya rajapaksa president candidate, gotabaya rajapaksa president candidate