மிருகக்காட்சி சாலையில் €200,000 யூரோக்கள் கொள்ளை!

0
577
€200,000 robbery Beauval zoo

Beauval மிருகக்காட்சி சாலையில் மே 14 இரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் €200,000 யூரோக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. €200,000 robbery Beauval zoo

காவல்துறையினர் தெரிவித்ததன் படி, குறித்த மிருகக்காட்சி சாலையில் இருந்து இரண்டு பணப்பெட்டகங்கள் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட இரண்டு பணப்பெட்டகங்களில் ஒன்று, ஞாயிற்றுக்கிழமை, வீதி ஓரத்தில் எறியப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது பணப்பெட்டகம் அதே நகரத்தின் பிறிதொரு பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு பணப்பெட்டகங்களும் உடைக்கப்பட்டு €200,000 யூரோக்கள் ரொக்கப்பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இக்கொள்ளை சம்பவத்தினால் மிருகக்காட்சி சாலை திறப்பதில் எந்த தடங்கலும் இல்லை எனவும், மிருகக்காட்சி சாலை வழமை போலவே இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, Saint-Aignan (Loir-et-Cher) இல் அமைந்துள்ள இந்த மிருகக்காட்சி சாலையில் தான் முதன் முதலாக பிரான்ஸில் பண்டா கரடி குட்டி ஒன்றை ஈன்றது. அத்துடன் இங்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டிலும் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**