(dead spider food bowl)
சிங்கப்பூரில் , வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்ட உணவுக் கிண்ணத்துக்கு அடியில் இறந்துபோன சிலந்தி இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இந்த தவறான செயலை தொடர்ந்து அவரிடம் Aloha Poke உணவகம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை நண்பர்களுடன் உண்டபோது குமாரி சியூ பிங் (Siew Ping) தம் உணவுக் கிண்ணத்தின் அடியில் சிலந்தியைக் கண்டுள்ளார், உணவு விநியோக நிறுவனமான Deliveroo மூலம் பெற்றுக்கொக்கொண்ட அந்த உணவைப் பற்றி உடனே ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் காத்தோங்கில் உள்ள தனது உணவு கிளையை இரண்டு நாட்களுக்கு மூடப்போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் , சமைக்கப்படாத உணவுகளை Aloha Poke கையாண்டு வருவதால் அதன் சுகாதாரத் தரத்தை தாழ்த்தி விடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மற்றும் , உணவு உண்டதன் காரணமாக அடுத்த சில நாட்களில் நோய்வாய்ப்பட்டால் குமாரி சியூ உடனடியாக நிறுவனத்திற்கு அறிவிக்குமாறு Aloha நிறுவனம் கூறியுள்ளது.
விசாரணை மேற்கொண்ட உணவகம், சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருக்க எதிர்காலத்தில் மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி செய்துள்ளது.
tags:-dead spider food bowl
most related Singapore news
இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!
**Tamil News Groups Websites**