(China approves USD one billion loan Central Expressway)
இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க சீனா அனுமதி வழங்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாணத்திற்கான முதல்கட்ட அதிவேக நெடுஞ்சாலையை அமைப்பதற்காகவே குறித்த கடன் தொகை வழங்கப்படவுள்ளது.
சீனாவிற்கான இலங்கை தூதுவர் Cheng Xueyuan பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்து இந்த செய்தியை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் தொகை தொடர்பாக சீனாவின் EXIM வங்கிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தரப்பிலிருந்து நிர்வாக மற்றும் சட்டரீதியாக ஒழுக்குமுறைகளை நிறைவேற்றுமாறு தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுக செயற்றிட்டம் மற்றும் கொழும் துறைமுக நகர திட்டம் ஆகியவை தொடர்பாக சீன அரச தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுக செயற்றிட்டத்தின் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வழிமுறைகள் தொடர்பாகவும் அவர் இதன்போது தகவல் வௌியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(China approves USD one billion loan Central Expressway)
More Tamil News
- இன்டர்போல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் நீக்கம்;கொந்தளிக்கும் சிங்கள ஊடகம்
- உயிரைப் பணயம் வைத்து தாயகம் திரும்பும் ஈழத் தமிழர்கள்
- மயிலைப் பார்க்க சென்ற சிறுவர்களுக்கு கிடைத்த மனித எச்சங்கள்
- எரிபொருள் விநியோகிக்காத 10 நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
- தலவாக்கலையில் திடீர் தீ விபத்து; வீடொன்று முற்றாகத் தீக்கரை
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது