உலகை பதறவைத்த அவுஸ்திரேலிய படுகொலைகள்: பின்னணி இதுவா?

0
784
Australia Ossmington Shooting Update

Australia Ossmington Shooting Update

அவுஸ்திரேலியாவின் ஒஸ்மிங்டன் துப்பாக்கிச் சூடு தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த துப்பாக்கிச் சூட்டை , கொல்லப்பட்ட குழந்தைகளின் தாயின் தந்தையே செய்திருப்பார் என தான் நம்புவதாக அவர்களின் தந்தை தெரிவித்துள்ளார்.

தனக்கு தெரிந்த வகையில், தனது அவர் இதே எண்ணத்திலேயே சில காலங்களாக இருந்ததாக தான் நம்புவதாக, குழந்தைகளின் தந்தை தெரிவித்துள்ளார்.

தென் மேற்கு அவுஸ்திரேலியாவில் ஒஸ்மிங்டன் பகுதியில் பண்ணை வீடொன்றில் இருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன.

நான்கு குழந்தைகள், 3 பெரியவர்களின் சடலங்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டன. இதில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் என நம்பப்படுகின்றது.

தனது மனைவி, மகள் மற்றும் அவரது 4 குழந்தைகளையும் கொன்று பின்னர் தான் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து துப்பாக்கிகளையும் பொலிஸார் கண்டுபிடித்தனர். இத்துப்பாக்கிகளின் உரிமப்பத்திரங்கள் அக்குழந்தைகளின் பாட்டனார் பேரிலேயே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள்.

அவர்கள் அனைவரும் 8 – 13 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் கொலை- மற்றும் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில், குழந்தைகளை தாயிடம் விட்டு விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த அவர்களின் தந்தை , தற்போது இத்தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.