இராணுவ தாக்குதலில் 41 பாலஸ்தீனியர்கள் பலி – 1800 காயம்

0
438
41 Palestinians killed massive protests Gaza Strip few minutes

(41 Palestinians killed massive protests Gaza Strip few minutes)

கிழக்கு ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் ஒன்று இன்று திறக்கப்படவுள்ள நிலையில் காஸா எல்லைப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் பேர் வரை கூடி உச்சகட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஸா எல்லைப் பகுதியில் யாரேனும் ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடாது என இஸ்ரேல் அரசாங்கத்தின் சார்பில் நேற்று துண்டு பிரசுரங்கள் பகிரப்பட்டன.

ஆனால், இதை பொருட்படுத்தாமல் காஸா எல்லைப் பகுதியில் உள்ள தடுப்பு வேலியின் அருகே பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.

கம்பி வேலியை தகர்த்து இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றதால் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குழந்தைகள் உள்பட 41 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 1800 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இஸ்ரேல் அரசின் இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாலஸ்தீனம் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பாலஸ்தீன அரசின் செய்தி தொடர்பாளர் யூசுப் அல்-மஹமூத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நாட்டு மக்கள் மீது இனவழிப்பு தாக்குதல்களை நடத்திவரும் இஸ்ரேலை விவகாரத்தில் சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இவர்களுடன் சேர்ந்து கடந்த ஒரு மாதத்துக்குள் இஸ்ரேல் இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

(41 Palestinians killed massive protests Gaza Strip few minutes)

More Tamil News

Tamil News Group websites :