மட்டக்களப்பில் 17 வயதுடைய மாணவி எடுத்த விபரீத முடிவு

0
1903
17 year old student committed suicide Batticaloa

(17 year old student committed suicide Batticaloa)
மட்டக்களப்பு தாழங்குடா பிரதேசத்தில் வேடர்குடியிருப்பு, கடற்கரை வீதியைச் சேர்ந்த சகாயநாதன் விதுசனா என்ற 17 வயதுடைய பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் குறித்த பெண் தற்கொலை செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

2017 ஆண்டில் சாதாரண தரப் பரீட்சை எழுதிய குறித்த மாணவி, காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

இன்று காலை 08.30 மணியளவில் தனது நண்பர்களுக்கு தொலைபேசியில் இருந்து குறுந்தகவல்களை அனுப்பிய பின்னரே தூக்கிலிட்டு தற்கொலை செய்துள்ளார்.

குறித்த பெண்ணின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்துவருகின்ற நிலையில், தாயார் தனது சிறிய பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற பின்னரே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எனினும் இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; 17 year old student committed suicide Batticaloa