{ 1 MDP scandal comes Mahathir regime }
மலேசியா: 1எம்டிபி முறைக்கேடு விவகாரத்தை முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் இதுநாள் வரை மூடி மறைத்து, கட்டிக் காத்து வந்தார். இப்போது, அவர் அதிகாரம் இழந்துள்ள வேளையில், 1எம்டிபி சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் வழக்கு நடத்தப்பட்டு, மூடி மறைக்கப்பட்ட ஊழல் வெளிக் கிளம்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
துன் மகாதீர் நாட்டின் 7-ஆவது பிரதமராக பதவியேற்று மூன்றே தினங்களில், நஜிப் மற்றும் அவரின் துணைவியார் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ள தடை விதித்தார். அதுமட்டுமல்லாது, 1எம்டிபி நிறுவனம் தொடர்பிலான முறைக்கேடு குறித்தும் தமது அரசாங்கம் ஆராயும் என்று மகாதீர் தெரிவித்தார்.
1எம்டிபி விவகாரத்திற்கும் நஜிப்பிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறிய சட்டத்துறை தலைவர் டான்ஶ்ரீ முகமட் அபாண்டி அலி அவரின் பதவியிலிருந்து வெளியேற்றப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1எம்டிபி விவகாரத்தில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும், ரிம.2.8 பில்லியனை தாம் பெற்றுக் கொள்ளவில்லை என்றும் நஜிப் கூறியிருந்தார். அதன் தொடர்பில், அவரிடம் கேள்வி எழுப்பிய தனது அமைச்சரவையை சேர்ந்த 4 அமைச்சர்களை அவர் உடனடியாக பதவியிலிருந்து வெளியேற்றினார். மேலும், அவ்விவகாரம் தொடர்பில் வழக்கு ஏதும் தொடங்கப் படாமல் நஜிப் இதுவரை தற்காத்து வந்தார்.
இப்போது, அரசாங்கம் மாறிவிட்ட நிலையில், நஜிப் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளாத வண்ணம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் மீது பல வழக்குகள் தொடங்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Tags: 1 MDP scandal comes Mahathir regime
<< RELATED MALAYSIA NEWS>>
*புதிய நாடாளமன்றத்துடன் பணியைத் துவங்கினார் அஸ்மின் அலி..!
*பினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் சவ் கோன்..!
*நஜிப் மீது முன்னாள் எம்.எ.சி.சி. உயர் அதிகாரி புகார்!
*புதிய மலேசிய பிரதமர் மகாதீர் அமைச்சர்களுடலான சந்திப்போடு பணியைத் தொடங்கினார்..!
*ஜிஎஸ்டி வரி தொடர்பில் வெளியானது பொய் செய்தியா..?
*எஸ்.பி.ஆர்.எம். தலைவர் சூல்கிப்ளி அஹ்மாட் இன்று பதவி விலகினார்!
*பிகேஆர் கட்சியில் சேர்ந்தார் 22 வயதுடைய இளம் எம்.பி. பிரபாகரன்..!
*நஜிப்பின் உறவினர் வீட்டில் போலீஸ் அதிரடிச் சோதனை!
*அன்வார் செவ்வாய்க்கிழமை விடுதலை!
<<Tamil News Groups Websites>>