இன்றைய ராசி பலன் 13-05-2018

0
733
Today horoscope 13-05-2018

மேஷ ராசி நேயர்களே !

செல்வ நிலை உயரும் நாள்.உறவினர்களின் வருகையால் திடீர் செலவுகளைச் சந்திக்க நேரிடலாம்.பயணங்கள் செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் சற்று விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது.

ரிஷப ராசி நேயர்களே !
அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.வெளியுலக தொடர்புகள் விரிவடையும்.விருந்து,விழாக்களில் கலந்து கொண்டு மகிழும் வாய்ப்பு உண்டு

மிதுனம் ராசி நேயர்களே !
கூடப்பிறந்தவர்களால் நன்மை கிட்டும் நாள். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.அரசுவழி அனுகூலம் உண்டு.தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கடக ராசி நேயர்களே !
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மக்கள் செல்வங்களின் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சியடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு புதிய தீர்வு கிடைக்கும்.

சிம்ம ராசி நேயர்களே !
செல்வந்தர்களின் சந்திப்பால் சிந்தை மகிழும் நாள். பூர்வீச் சொத்துத் தகராறுகள் அகலும். புதிய தொழில்தொடங்கும் முயற்சி கைகூடும். வாகன பராமரிப்பு செலவிற்காக ஒரு தொகையைச் செலவிட்டு மகிழ்வீர்கள்.

கன்னி ராசி நேயர்களே !
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள்.புதிய பாதை புலப்படும். செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். பிள்ளைகளால் பெருமை உண்டு.வரவிற்கேற்ற செலவுகள் ஏற்படும்.வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

துலாம் ராசி நேயர்களே !
யோசித்து செயல்பட வேண்டிய நாள்.எதிர்பாராத விரயங்கள் உண்டு. ஆசைப்பட்ட பொருட்களை வாங்க அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும்.உத்யோகத்தில் உயரதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

விருச்சிகம் ராசி நேயர்களே !
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணையும் வாய்ப்பு உண்டு. சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.

தனுசு ராசி நேயர்களே !
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள்.பல நாட்களாகச் செய்ய நினைத்த காரியத்தை இன்று செய்து முடிப்பீர்கள்.தேக ஆரோக்யத்தில் தெளிவு பிறக்கும்.பொல்லா தவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

மகர ராசி நேயர்களே !
வாய்த்த நண்பர்களால் வளர்ச்சி கூடும் நாள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

கும்பம் ராசி நேயர்களே !
நட்பு வட்டம் விரிவடையும் நாள்.உடன் பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை எடுத்துக்கொள்வர். நீண்ட நாளைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மீனம் ராசி நேயர்களே !
சான்றோர்களின் சந்திப்பால் சந்தோ‌ஷம் கிடைக்கும் நாள். பணவரவு எதிர்பார்த்தடியே வந்து சேரலாம்.குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.சுபகாரிய பேச்சுக்கள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்