தனக்கு அந்த எண்ணமில்லை

0
159
no idia presidency election provincial no discussion current government

no idia presidency election provincial no discussion current government
ஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடும் அரசாங்கத்திற்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் குறித்து மறந்துபோய் விட்டதா என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கேள்வி எழுபபியுள்ளார்.

தெஹிவளையில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தின் தலைமைகள் ஒன்று கூடி ஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடுகின்றனர்.

பல்வேறு தரப்புக்களுடன் வௌ;வேறான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது குறித்து இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை.

உள்ளுராட்சி தேர்தல் பெற்றுக்கொடுத்த பெறுபேறே அதற்கு காரணமாக இருக்கலாம் எனவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு முயற்சிப்பதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

தனக்கு ஜனாதிபதியாக வரவேண்டும் என்ற எண்ணம் இதுவரை தோன்றவில்லை, வேட்பாளராக களமிறங்கும் சிந்தனையும் இல்லை என சுட்டிக்காட்டினார்.
no idia presidency election provincial no discussion current government

More Tamil News

Tamil News Group websites :