பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது

0
439
many more people cheet women hambantota foreign vacancy

many more people cheet women hambantota foreign vacancy
அம்பாந்தோட்டை திக்வெல்ல பகுதியில் நிதி மோசடியில் ஈடுப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த வயதினரானாலும் இத்தாலியில் தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாக கூறி ஒரு குழுவினர் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் படி, நேற்று இரவு ஹம்பாந்தோட்டை திக்வெல்லையில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பெண்ணுக்கு புத்தளம் வனாத்துவில்லு பகுதியில் வீடொன்று காணப்படுவதாகவும், அந்த வீட்டிலேயே நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 இற்கும் மேற்பட்ட நபர்களிடம் 20 இலட்சம் முதல் 60 இலட்சம் ரூபாய் வரை நிதி மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
many more people cheet women hambantota foreign vacancy

More Tamil News

Tamil News Group websites :