பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களுக்கு நடந்தது என்ன?

0
116
creak country hose arrest Lankan three person recovered police

creak country hose arrest Lankan three person recovered police
கிரேக் நாட்டில் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் அந்நாட்டு பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இலங்கையை சேர்ந்த மூவர் இவ்வாறு பணயக் கைதிகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த குழுவொன்றினால் வடக்கு கிரேக்கத்தின் தெசலொனிகி நகரில் 50 பேர் கொண்ட அகதிகள் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த அகதிகளின்; குடும்பத்தாரை அச்சுறுத்தி கப்பம் பெறும் நோக்கில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமமைய அந்நாட்டு பொலிசார் அவர்களை மீட்டுள்ளதாக அந்த நாட்டின் குடிவரவுக்கொள்கை அமைச்சர் டிமிட்ரிஸ் விஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட 50 பேரையும் அவர்களின் நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, சிலர் தொழில் வீசாவில் வசிக்கின்றமையினால் உரிய நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
creak country hose arrest Lankan three person recovered police

More Tamil News

Tamil News Group websites :