கண்டியிலிருந்து தெல்தோட்டைக்கு செல்பவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

0
556
bus honers protest kandy deltota private bus conductor attack

bus honers protest kandy deltota private bus conductor attack
கண்டியிலிருந்து தெல்தோட்டை வரையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளதாக தெல்தோட்டை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று காலை முதல் இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என அந்த சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

தெல்தோட்டை கண்டி நகரங்களுக்கிடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் நடத்துனர் உருவர் மாகந்த என்ற பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பேருந்து நடத்துனர் தாக்கப்பட்டமைக்கு எதிராக உரிய தீர்வு கிடைக்க பெறாத பட்சத்தில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் எனவும் தெல்தோட்டை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
bus honers protest kandy deltota private bus conductor attack

More Tamil News

Tamil News Group websites :