இலங்கையில் அதிர்ச்சி; மூன்றரை வயது குழந்தையை சீரழித்த முதியவர்

0
1738
Three year old girl sexually abusive Suspect arrested

(Three year old girl sexually abusive Suspect arrested)
ஹன்வெல்ல துன்னான பிரதேசத்தில் மூன்றரை வயதுடைய முன்பள்ளி சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதான குற்றச்சாட்டின் பேரில் 65 வயதுடைய வயோதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய வயோதிபர் ஒருவரே பாதுக்க பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி அவளது இல்லத்தில் அசாதாரணமாக நடந்துகொண்டதை அவதானித்த அவளின் பெற்றோர், சிறுமியிடம் வினவியுள்ளனர்.

இதன்போது, முன்பள்ளி ஆசிரியையின் தந்தை தொடர்ப்பாகவும் அவரால் ஏற்பட்ட தொந்தரவு குறித்தும் தகவல் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, பாதுக்க பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரான வயோதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேக நபரான வயோதிபர் அவிசாவளை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Three year old girl sexually abusive Suspect arrested