மக்ரோன் தம்பதியினரின் உல்லாசப் பயணம்!

0
816
Macron family visit fort de Brégançon may12

மக்ரோன் தம்பதியினர் பிரெஞ்சுத் தீவான fort de Brégançonக்கு இன்று விஜயம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.Macron family visit fort de Brégançon may12

இமானுவேல் மக்ரோன் மற்றும் அவரது மனைவியான பிரெஞ்சு நாட்டின் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் fort de Brégançon ற்கு செல்ல உள்ளனர். 1968 ஆம் ஆண்டில் இருந்து பிரெஞ்சு ஜனாதிபதி ஓய்வெடுப்பதற்காக இந்த தீவு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக சாள்-து-கோல் இந்த தீவினை ஓய்வெடுப்பதற்காகவும், தங்கியிருப்பதற்காகவும் பயன்படுத்தினார். இறுதியாக ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்து 2012 ஆம் ஆண்டு கோடை விடுமுறையின் போது தனது மனைவியுடன் இங்கு தங்கியிருந்தார்.

தற்போது மக்ரோன் தம்பதியினர் இருநாட்கள் விஜயம் மேற்கொள்ள உள்ளனர். அதனை முடித்து விட்டு வரும் திங்கட்கிழமை (மே 14) மீண்டும் பரிஸுக்கு திரும்புவார்கள்.

மேலும் இதுவே மக்ரோன் தம்பதியினரின் fort de Brégançon தீவிற்கான முதற்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**