காட்டு யானைகளுக்கு சிறந்த பாடம் கற்பிப்பேன்

0
142
Sarath Fonseka appropriate conduct referendum imposing death penalty

elephant attack stop very soon people protect srath fonseka
காட்டு யானைகளின் தாக்குதல்களிலிருந்து பொது மக்களை காப்பாற்றுவதற்கு நிரந்தர தீர்வொன்றினை வழங்கவுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் மக்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

பொலன்னறுவை, தியபெதும பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் காட்டு யானையில் தாக்குதலில் உயிரிழந்த நபரின் வீட்டுக்கு வன ஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா மற்றும் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும ஆகியோர் நேற்று விஜயம் செய்துள்ளனர்.

உயிரிழந்தவரின் உறவினர்களை சந்தித்த பின்னர் பிரதேசவாசிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

யானை, தாக்குதல் தற்பொழுது அதிகரித்திருப்பதாகவும், இதற்கு மக்களுடன் இருந்து தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.
elephant attack stop very soon people protect srath fonseka

More Tamil News

Tamil News Group websites :