புதிய திட்டத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட தனுஷ்..!

0
1000
Dhanush join Cannes Film Festival,Dhanush join Cannes Film,Dhanush join Cannes,Dhanush join,Dhanush

(Dhanush join Cannes Film Festival)

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் தனுஷ் பிரான்ஸ் சென்றுள்ளார்.

2002-ல் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ், படிப்படியாக வளர்ந்து ”ராஞ்சனா”, ”ஷமிதாப்” என்று இந்தி வரை போனார். இவர் பாடிய ”கொலை வெறி” பாடல் உலகம் முழுவதும் கலக்கியது.

நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என்று பல அவதாரங்கள் எடுத்த பிறகு இப்போது ஹாலிவுட்டுக்கும் போய் உள்ளார். தனுஷ் நடித்துள்ள ”எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஜார்னி ஆப் த பஹிர்” என்ற படம் இந்திய, பிரான்ஸ் கூட்டு தயாரிப்பில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தயாராகி உள்ளது.

கனடாவைச் சேர்ந்த பிரபல டைரக்டர் கென் ஸ்காட் டைரக்டு செய்துள்ளார். இந்த மாதம் இறுதியில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

இப் படம் பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இதற்காக தனுஷ் பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கேன்ஸ் பட விழாவில் இந்திய-பிரான்ஸ் திரைப்படங்கள் வர்த்தகம் சம்பந்தமாக நடைபெறும் கருத்தரங்குகளில் பங்கேற்று பேசுகிறார்.

அது மட்டுமல்லாமல், இந்தப் படம் மூலம் ஆங்கில பட வாய்ப்புகளை பிடிக்கும் திட்டத்தில் இருக்கிறார்.

மேலும், தமிழில் தனுஷ் கைவசம் ”வடசென்னை”, ”மாரி-2”, ”எனை நோக்கி பாயும் தோட்டா” ஆகிய 3 படங்கள் உள்ளன. ரஜினிகாந்தை வைத்து அவர் தயாரித்துள்ள ”காலா” படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

வருத்தத்தில் தவிக்கும் மூக்கு நீள வாரிசு நடிகை..!

படுக்கை அறையில் அது மட்டும் வேண்டாம் : சோனம் கபூருக்கு கணவர் கொடுத்த முதல் அதிர்ச்சி..!

இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி..!

அஜய் தேவ்கான் – கஜோல் குடும்பத்தில் பிளவு : இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு..!

விஷ்ணு விஷாலின் ”ராட்சசன்” பட மோஷன் போஷ்டர் ரிலீஸ்..!

இரவுக்கு ஆயிரம் கண்கள் : திரை விமர்சனம்..!

வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து வாழும் அமலா பால்..!

நடிகையர் திலகம் : திரை விமர்சனம்..!

ஸ்ரீரெட்டியால் அதிர்ச்சியான பிரபல நடிகர் : சினிமா உலகில் பரபரப்பு..!

Tags :-Dhanush join Cannes Film Festival

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

சூப்பர் சிங்கரில் மையம் கொண்டுள்ள இசைப்புயல்! கண் கலங்கிய விஜய் குடும்பம்