நிசங்கவிடம் இலஞ்சம் பெற்ற 300 பொலிஸ் அதிகாரிகள் : விசாரணையில் அம்பலம்

0
815
Nissanka Senadhipathi

(300 police officers Received bribes Nissanka Senadhipathi)
அவன்ட் கார்ட் பாதுகாப்புச் சேவை நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதியிடம் 300இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள், பணம் பெற்று வந்துள்ளனர் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

முன்னைய ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி, தம்மிடம் பணம் பெற்ற 300 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகளின் பட்டியலை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ளார்.

இதில், குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

நிசங்க சேனாதிபதியிடம் பணம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவர்களிடம் வாக்குமூலங்கள் பெறும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :