29 முறை டெல்லிக்குச் சென்று பயன் இல்லை. – சந்திரபாபு நாயுடு

0
317
29 times demand special status Andhra Pradesh benefit

29 times demand special status Andhra Pradesh benefit

இந்திய ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி 29 முறை டெல்லிக்குச் சென்று வலியுறுத்தினேன். பயன் எதுவும் இல்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என சந்திரபாபு நாயுடு தொடர்ந்து இந்திய மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார்.

இது குறித்து அம்மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சந்திரபாபு நாயுடு,

மூன்று முறை பிரதமர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.

அப்போதெல்லாம் நிச்சயம் இதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். கடந்த 2014ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் பத்து ஆண்டுகளுக்கு ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் எனத் தெரிவித்தனர்.

ஆனால், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம். அலட்சியம் செய்து வருகிறார். இது தொடர்பாக 29 முறை டெல்லிக்குச் சென்று வலியுறுத்தினேன். பயன் எதுவும் இல்லை.

நீதிக்காகப் போராடி வருகிறோம். சிறப்பு அந்தஸ்து என்பது ஒரு தனிநபரின் பிரச்சினை அல்ல. இது மாநில நலனுக்கான பிரச்சினை. அவரவர் மாநிலத்தின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து மத்திய அரசிடம் முறையிட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

29 times demand special status Andhra Pradesh benefit

More Tamil News

Tamil News Group websites :