இன்றைய ராசி பலன் 11-05-2018

0
969
Today horoscope 11-05-2018

(Today horoscope 11-05-2018 )

இன்று!

விளம்பி வருடம், சித்திரை மாதம் 28ம் தேதி, ஷாபான் 24ம் தேதி,
11.5.18 வெள்ளிக்கிழமை, தேய்பிறை, ஏகாதசி திதி, இரவு 9:24 வரை;
அதன் பின் துவாதசி திதி, பூரட்டாதி நட்சத்திரம் காலை 11:10 வரை;
அதன் பின் உத்திரட்டாதி நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மகம்,பூரம்
பொது : ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு.

மேஷ ராசி நேயர்களே !
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நேற்றுப் பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடர்வீர்கள். பக்கத்தில் இருந்தவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். நிதி உயரும்.

ரிஷப ராசி நேயர்களே !
சகோதரசச்சரவுகள் அகலும் நாள். தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிவது நல்லது. பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டு புதிய வாகனங்கள் வாங்க வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும்.

மிதுனம் ராசி நேயர்களே !
வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வி.ஐ.பிக்களின் ஒத்துழைப்போடு விரும்பிய காரியமொன்றைச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் அகலும்.

கடக ராசி நேயர்களே !
உதிரி வருமானங்கள் பெருகும்நாள். வரவு திருப்திகரமாக இருந்தாலும் நண்பர்களுக்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு. மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சி வெற்றி தரும்.

சிம்ம ராசி நேயர்களே !
அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கூடும் நாள். முயற்சித்த காரியங் களில் வெற்றி கிடைக்கும். பணப் பொறுப்புகளை மற்றவர்களிடம் யோசித்து ஒப்படைப்பது நல்லது.

கன்னி ராசி நேயர்களே !
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்போடு தொழில் வளர்ச்சி காண்பீர்கள். லாபம் எதிர்பார்த்த படியே வந்து சேரும். துணையாக இருப்பவர் கள் தோள் கொடுத்து உதவுவர்.

துலாம் ராசி நேயர்களே !
சொல்லைச்செயலாக்கிக் காட்டும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். கண்காணித்துக் கொள்வது நல்லது

விருச்சிகம் ராசி நேயர்களே !
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடுமாற்றம், உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பயணங்களால் இடையூறுகள் ஏற்படும்.

தனுசு ராசி நேயர்களே !
உயர்அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். உத்தியோக உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தை வழி ஆதரவு உண்டு

மகர ராசி நேயர்களே !
விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும். பக்கபலமாக இருப்பவர்கள் மாலை நேரத்தில் உங்களுக்கு நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.

கும்பம் ராசி நேயர்களே !
பொழுது விடியும்பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வியாபார நலன்கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

மீனம் ராசி நேயர்களே !
உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். இடம், பூமியால் லாபம் உண்டு. உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். நேற்றைய மனக்கசப்புகள் இன்று மாறும்.பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today horoscope 11-05-2018