(tamilnews jaffna petrolatum cooperation hiding petrol fuel)
எரிபொருள்களின் விலை இன்று நள்ளிரவுடன் அதிகரிக்கப்பட்டதாக அரசு அறிவித்த நிலையில் எரிபொருள் விநியோகஸ்தர்கள் சிலர் அவற்றைப் பதுக்க முயற்சித்த போதும் பாவனையாளர் அதிகார சபையினர் தலையிட்டு சீரான விநியோகத்துக்கு வழியமைத்தனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று இரவு இடம்பெற்றது.
பெற்றோல் மற்றும் மண்ணெண்ணையைக் கொள்வனவு செய்வதில் மக்கள் மும்முரமாக உள்ளனர்.
அதற்காக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பெற்றோல் வாகனங்களுடன் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்றிரவு வரிசையில் காத்திருந்தனர்.
அத்துடன் விவசாயிகள் உட்பட பலர் மண்ணெண்ணையைக் கொள்வனவு செய்வதற்காக கேன்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கின்றனர்.
இந்தநிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் சில பெற்றோல் மற்றும் மண்ணெண்ணை விநியோகத்தை நிறுத்தி வாடிக்கையாளர்களை ஏமாற்றத்துடன் திருப்பியனுப்பினர்.
இதுதொடர்பில் பொது மக்கள் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடங்களுக்கு விரைந்த பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரிகள், பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு அறிவித்து சீரான எரிபொருள் விநியோகத்துக்கு வழியமைத்தனர்.
எரிபொருள்களின் விநியோகத்தை சீராக முன்னெடுப்பது பெற்றொலியக் கூட்டுத்தாபனத்தின் பணியாகும்.
கூட்டுத்தாபனம் தனது இலகுபடுத்திய சேவைக்காகவே விநியோகத்தர்களை வைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்துகின்றது.
எரிபொருள்களை பதுக்கி வைப்போர் மீது கூட்டுத்தாபனம் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
(tamilnews jaffna petrolatum cooperation hiding petrol fuel)
More Tamil News
- வெள்ளை வான் கடத்தல் கலாசாரம் தற்போது இல்லை
- தங்க பிஸ்கட்டுக்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது
- போதைப் பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது
- பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
- ஊவா மாகாண தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில்
- சிறைச்சாலை காவலர்களுக்கு ஏற்பட்ட கதி
- அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவிற்கு மீண்டும் விளக்கமறியல்
- ‘துயிலுமில்லத்தில் நின்று அழும் உரிமையை தாருங்கள்’: காக்கா அண்ணாவின் மனதை உருக்கும் காணொளி
- இன அழிப்பு நாளாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் பிரகடனம்