Journalist S.Gurumurthy said Rajinikanth Modi join
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் ஆற்றல் நடிகர் ரஜினிகாந்துக்கு இருப்பதாகவும் ரஜினியும் மோடியும் இணைந்தால் வெற்றி கிடைக்கும் எனவும் பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடக தேர்தல் முடிந்ததும்தான் காவிரி பிரச்சினையில் மத்திய அரசு ஒரு முடிவை எடுக்க முடியும். தேர்தல் நடக்கும்போதே அறிவித்தால் கர்நாடகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என மத்திய அரசு கருதுகிறது. அதனால்தான் இந்த தாமதம். காவிரி பிரச்சினையில் உயர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதைத் தவிர மத்திய அரசுக்கு வேறுவழியில்லை.
வேறொருவர் ஆட்சி அமைக்கும் நிலை உருவானால்தான் அ.தி.மு.க. அரசு கவிழும். இவர்தான் அடுத்த முதல்வர் என ஒருவரை கொண்டு வந்து நிறுத்த எந்தக் கட்சியாலும் முடியவில்லை. முதல்வர் பழனிச்சாமி அரசு செயல்படுவதாகவே நான் நினைக்கவில்லை.
ஒரு கட்சிக்கு தலைமை இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் ஆற்றல் ரஜினிகாந்துக்கு உண்டு. ரஜினியும், மோடியும் இணைந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என்பது எனது கருத்து. ரஜினிகாந்த், கமல்ஹாசன் என யாருக்கும் நான் ஆலோசனை வழங்கவில்லை. ஆனால், பலருக்கும் நான் ஆலோசகராக இருப்பதாக வதந்தியை பரப்பி வருகின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை.
தேசிய அளவில் 3ஆவது அணி அமைக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பெனர்ஜி உள்ளிட்டோர் எடுத்து வரும் முயற்சிகள் பா.ஜ.க.வுக்கே சாதகமாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.
(Rajinikanth and Modi will win they join)
more Time Tamil News Today
- காதலால் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்த பிரபலங்கள்!
- தமிழ்ப் பெண்களின் மனதைக் கொள்ளை கொண்ட கலாபக்காதலன் ; ஆர்யாவுக்கு ஸ்பெஷல் விருது
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்
- கேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்!
- ஈரானிய ஜனாதிபதிக்கான சுவிஸ் அழைப்பு இன்னும் திறந்திருக்கிறது