நேபாளத்தில் பிரதமர் மோடி: அயோத்தி பஸ் சேவை ஆரம்பம்

0
562
Indian Prime Minister Narendra Modi started bus service Ayodhya country.

Indian Prime Minister Narendra Modi started bus service Ayodhya country.

இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டில் இருந்து அயோத்திக்கு பஸ்  சேவையை ஆரம்பித்து வைத்துள்ளார்.

இந்திய  கர்நாடக மாநிலத்தின் தேர்தல் பிரசாரத்தை முடித்த நிலையில், பிரதமர் மோடி  இரண்டு நாள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) நேபாளம் சென்றடைந்தார்.

நேபாளம் தலைநகர் காத்மாண்டிலிருந்து 225 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ஜனக்பூருக்கு சென்றடைந்த மோடியை நேபாளம் பிரதமர்  கே.பி.சர்மா ஒளி வரவேற்றுள்ளார்.

பின்னர் ஜனக்பூரிலிருந்து உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி இடையே சுற்றுலா பயணிகளுக்கான பஸ்  சேவையை ஆரம்பித்து வைத்துள்ளதுடன், அங்கு நடைபெறும் பொது கூட்டத்தில் உரையாற்றியுள்ளார்.

இதன் பின்னர் மதியம் காத்மாண்டில் நேபாள  ஜனாதிபதி பிந்தியா தேவியை மோடி சந்திக்கவுள்ளார்.  இந்தச் சந்திப்பில் முக்கிய மூன்று ஒப்பந்தங்களில் மோடி கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேபாளம் பயணம் குறித்து மோடி கூறுகையில் ‘‘இமாலய பிரதேசமான நேபாளத்துக்கான எனது பயணம் அண்டை நாடுகளுமே முதல் உரிமை என்ற எங்கள் அரசின் நிலைப்பாட்டை காட்டுக்கிறது. இந்தியாவின் பழைய நண்பனான நேபாளத்துடன் நெருக்கமான உறவை பிரதிப்பலிக்கிறது” எனத்  தெரிவித்துள்ளார்.

பிரதமராக நேபாளத்துக்கு மோடி மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Indian Prime Minister Narendra Modi started bus service Ayodhya country.

more Time Tamil News Today

Time Tamil News Group websites :