Indian High Court dismissed petition filed againstt religiously voting
மத ரீதியாக வாக்கு சேகரிப்பதாக எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இந்திய உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்திய கர்நாடக மாநிலத் தேர்தல் நாளை நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் கடந்த மாதம் 27ஆம் திகதி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், மத ரீதியாக வாக்கு சேகரிப்பதாக எதிர்ப்பு தெரிவித்து ராஷ்ட்ரீய இந்து சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் என்பவர் இந்திய உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் டி. வை.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துவிட்டாலே அதுதொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது. சிறுபான்மை சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக உறுதியளிப்பதை மத ரீதியாக வாக்கு சேகரிப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது. வேண்டுமானால் தேர்தல் முடிந்த பிறகு இதே விவகாரத்தை மனுதாரர் அணுகலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளனர்.
High Court dismissed petition filed againstt religiously voting
More Time Tamil News Today
- முஸ்லிம் ஆசிரியையின் சர்ச்சை; அதிரடி முடிவு
- ரவிக்கு தலைவர் பதவி, வெளியேறினார் ஜோசப்
- களியாட்ட விடுதிகளுக்கு தடை : அரசாங்கம் அறிவிப்பு
- மக்களே அவதானமாக இருங்கள்….!
- மே 1 ஆம் திகதியா அல்லது 7 ஆம் திகதியா விடுமுறை? : அறிவித்தார் தொழில் ஆணையாளர்
Time Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news