ஈரானுடன் தொடர்பு வைத்திருக்கும் சில நிறுவனங்கள் மீது அமெரிக்கா மீண்டும் தடை விதித்துள்ளதை பிரான்ஸ் கண்டித்துள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. France condemned America
இந்த அமெரிக்காவின் முடிவுக்கு ஐரோப்பிய நிறுவனங்கள் பணம் செலுத்த தேவையில்லை என்று பிரான்ஸ் வெளியறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
ஆறு மாதங்களுக்குள் தடை விதிக்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் தொழில்களை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் புதிய ஒப்பந்தங்கள் போடக்கூடாது எனவும் அப்படி செய்தால் மேலும் புதிய தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமெரிக்கா அச்சுறுத்தியுள்ளது. இதற்கு பிரான்ஸ், அமெரிக்காவின் தடை நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என்று கூறியுள்ளது.
இத்தடையினால் ஏர்பஸ், கார் நிறுவனங்கள் ரெனால்ட் மற்றும் போஷொ, எண்ணெய் நிறுவனமான டோடல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.
2015ல் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பின்பு, இந்நிறுவனங்கள் பில்லியன் டொலர் கணக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இந்நிறுவனங்கள் இவ்வருட நவம்பரோடு தங்களது தொழில்களை முடித்துக் கொள்ளவில்லை என்றால் அமெரிக்காவின் தடைகளை சந்திக்க நேரிடும்.
ஈரானின் பலம்பொருந்திய புரட்சி காவல்படையுடன் (IRIC) தொடர்பு கொண்டிருப்பதாகக் கூறப்படும் 6 நபர்கள் மற்றும் 3 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
**Most Related Tamil News**
- கேன்ஸில் திரையிடப்பட உள்ள தனுஷின் படம்!
- விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு!
- உதட்டில் நெருப்பு புகையாமல் இருந்தால் ஆச்சரியம் ஷாலினி
- Google சுந்தர் பிச்சைக்கு கிடைத்த 2500 கோடி ஜக்பொட்!