ஊவா மாகாண தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில்

0
1254

(Uva Provincial nurses strike protest)
ஊவா மாகாணத்தின் அரச வைத்தியசாலைகளில் அரசாங்க தாதியர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று காலை 08 மணி முதல் 12 மணி வரையில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளவரும் நோயளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

அரசாங்க தாதியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் அரச சலுகைகள் நேர்த்தியான முறையில் கிடைக்கப்பெறாமை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே, இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் வெலிமடை வைத்தியசாலையிலும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், வைத்தியசாலையின் வளாகத்தில் தாதியர்கள் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.

எனவே, இதற்கு அரசாங்கம் உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என குறிப்பிட்டதோடு, அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்படப் போவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாதியர்கள் தெரிவித்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Uva Provincial nurses strike protest