முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் நள்ளிரவு முதல் அதிகரிப்பு

0
183
tamilnews petrol price hike three wheeler chargers ups

(tamilnews petrol price hike three wheeler chargers ups)

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ள நிலையில் முச்சக்கரவண்டிக்கான பயணக் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பயணத்தின் முதல் கிலோமீற்றருக்கு 10 ரூபாவால் விலையை அதிகரிக்க முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதுவரை காலமும் 50 ரூபாவாக குறைந்தபட்ச விலை கட்டணம் நாளை முதல் 60 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

நள்ளிரவு முதல் இந்த விலைத்திட்டம் அமுலாகும் என முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

(tamilnews petrol price hike three wheeler chargers ups)

More Tamil News

Tamil News Group websites :