(Ranveer Kapoor Alia bhatt love Bollywood KisuKisu)
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கும், இந்தி நடிகை அலியாபட்டுக்கும் இடையே புதிதாக காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-
இந்தி திரையுலக பழம்பெரும் நட்சத்திர தம்பதியான ரிஷிகபூர் – நீட்டுசிங் மகன் தான் ரன்பீர் கபூர். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.
ரன்பீர் கபூருக்கும், இந்தி நடிகை கத்ரினா கைப்புக்கும் சில வருடங்களுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இருவரும் ஜோடியாக சுற்றினார்கள். திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் திடீரென்று கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
அதன்பிறகு ஒருவரையொருவர் பார்ப்பதை தவிர்த்து வந்த இருவரும் அனுஷ்கா சர்மா-விராட் கோலி திருமணத்தில் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. இருவரும் பேசிக்கொண்டனர். அவர்களுக்கு மீண்டும் காதல் மலரும் என்று கணித்த நிலையில் காதல் முறிந்தது முறிந்ததுதான் என்ற ரீதியில் விலகி விட்டனர்.
இந் நிலையில், ரன்பீர் கபூருக்கும், இந்தி நடிகை அலியாபட்டுக்கும் இடையே புதிதாக திடீர் காதல் மலர்ந்துள்ளது. ரகசியமாக சந்தித்து காதலை வளர்த்த இருவரும் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த நடிகை சோனம் கபூர் திருமணத்தில் ஜோடியாக கைகோர்த்து வந்து காதலை உறுதிப்படுத்தி உள்ளனர். இதனால், ரன்பீர் கபூர்-அலியாபட் காதல் விவகாரம் இந்தி பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
மேலும், அலியா பட் பிரபல இந்தி இயக்குனரும், தயாரிப்பாளருமான மகேஷ்பட்டின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
<<MOST RELATED CINEMA NEWS>>
* காலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..! (பாடல்கள் இணைப்பு)
* படுக்கை அறையில் அது மட்டும் வேண்டாம் : சோனம் கபூருக்கு கணவர் கொடுத்த முதல் அதிர்ச்சி..!
* இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி..!
* வசூலில் 2000 கோடியை நெருங்கிய பாகுபலி 2 : உச்சம் தொட்ட வசூல் சாதனை..!
* பாலிவுட்டின் அழகிகள் நடுவே ஜொலி ஜொலித்த சோனம் கபூர்..! (படங்கள் இணைப்பு)
* நியூயோர்க் சர்வதேச திரைப்பட விருது விழாவில் ஆடைகளால் சொக்க வைத்த பிரபல நடிகைகள்..!(படங்கள் இணைப்பு)
* திலகம் நடிகரின் பேரனை திருமணம் செய்யவுள்ள பெரிய வீட்டு நடிகை..!
* மாரி 2 படக்குழுவினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சாய் பல்லவி..!
* ஸ்ரீரெட்டியால் அதிர்ச்சியான பிரபல நடிகர் : சினிமா உலகில் பரபரப்பு..!
Tags :-Ranveer Kapoor Alia bhatt love Bollywood KisuKisu
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-
யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு : நாட்டு மக்களே அவதானம்..!