ஒன்ராறியோ மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்

0
927
Ontario Election Final Stage

Ontario PC Election

ஒன்ராறியோ மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளன.

ஒன்ராறியோவின் தற்போதய சட்டமன்றம் கலைக்கப்படுவதான அதிகாரபூர்வ பிரகடனத்தில் ஆளுநர் நாயகம் எலிசபெத் டெளட்ஸ்வெல் கையெழுத்திட்டுள்ளதன் மூலம், ஒன்ராறியோவின் 41ஆவது சட்டமன்றுக்கான தேர்தலுக்கு வழிவிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்தே இன்று தேர்தல் பரப்புரைகளை கட்சிகள் உத்தியோகபூர்வமாக தொடங்கவுள்ளதுடன், லிபரல் கட்சித் தலைவர் கத்தலின் வின் தமது கட்சியின் பரப்புரை நடவடிக்கையின் முதற்கட்டமாக ரொரன்ரோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சில நிகழ்வுகளில் பங்கேற்கின்றார்.

அவ்வாறே முற்போக்கு பழமைவாதக் கட்சித் தலைவர் டக் ஃபோர்டும் காலையிலேயே தனது தேர்தல் பரப்புரையினை ரொரன்ரோவில் தொடங்குவதுடன், ஒன்ராறியோவின் கார்ப் பகுதிக்கு சென்று மக்கள் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் ஒன்ராறியோவின் றென்ஃபுரூவில்(றென்fரெந்) நடைபெறவுள்ள பேரணியிலும் பங்கேற்கவுள்ளார்.

புதிய சனநாயகக் கட்சியின் தலைவர் ஆன்ட்ரியா ஹோர்வத் தனது முதல்நாள் பரப்புரையினை ரொரன்ரோவில் முன்னெடுக்கவுள்ளதுடன், காலையில் சுகாதார பராமரிப்புத் திடடம் தொடர்பிலான நிகழ்வு ஒன்றிலும், பிற்பகல் தேர்தல் பரப்புரை நிகழ்வு ஒன்றிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

பசுமைக் கட்சித தலைவரும் ரொரன்ரொ நிலக்கீழ் தொடரூந்து நிலையப் பகுதியில் தனது பரப்புரைகளை தொடங்குகின்றார்.

அத்துடன் ஒனராறியோவின் Gஉஎல்ப்ஹ் பகுதியில் தனது தேர்தல் பரப்புரை அலுவகத்தினையும் இன்று மாலையில் அவர் திறந்து வைக்கவுள்ளார்.