ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல்

0
317
America departure nuclear deal Iran

(America departure nuclear deal Iran Tamil news)

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வாஷிங்டனில் பேசிய அவர், ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை தடுக்கமுடியாது எனவும், அணு ஆயுத ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருப்பதால் அமெரிக்கா விலகிக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகள் குறித்த உத்தரவுகளில் டிரம்ப் கையெழுத்திட்டார்.

மேலும் ஈரானுடன் அணுசக்தி திட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் மற்ற நாடுகளும் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

(America departure nuclear deal Iran Tamil news)
image from CNN

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை