பிரான்ஸை இன ரீதியாக விமர்சித்த ரஷ்யா!

0
828
£22000 fine Russian Football Federation

பிரான்ஸ் நாட்டு கால்பந்து வீரர்களை ரஷ்ய ரசிகர்கள் இன ரீதியாக விமர்சித்த விவகாரத்தில், ரஷ்ய கால்பந்து சம்மேளனத்துக்கு 22,000 பிராங்க் அபராதம் விதித்து கால்பந்து சங்கங்களுக்கான சர்வதேச சம்மேளனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. £22000 fine Russian Football Federation

ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ்ப்ர்கில் உள்ள மைதானத்தில் கடந்த மார்ச் மாதம் ரஷ்யா-பிரான்ஸ் அணிகள் மோதிய நட்பு ரீதியிலான கால்பந்து ஆட்டம் நடைபெற்றது.

இதில் பிரான்ஸ் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின்போது பிரான்ஸ் வீரர்களை குரங்குடன் ஒப்பிட்டு ரஷ்ய ரசிகர்கள் இன ரீதியாக விமர்சித்து கோஷமெழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அந்தச் சம்பவம் தொடர்பாக கால்பந்து சங்கங்களுக்கான சர்வதேச சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொண்டது. கானா உச்ச நீதிமன்ற நீதிபதி அனின் எபோவா தலைமையிலான அந்தக் குழு, சம்பவம் தொடர்பான வீடியோ பதிவையும் ஆய்வு செய்தது. அதில் ரஷிய ரசிகர்கள் இன ரீதியாக விமர்சித்தது உறுதி செய்யப்பட்டு, ரஷிய கால்பந்து சம்மேளனத்துக்கு 22,000 பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டது.

அத்துடன், விளையாட்டைக் காண வரும் ரசிகர்கள் ஒற்றுமை மற்றும் நட்புணர்வுடன் செயல்படுமாறு கால்பந்து சங்கங்களுக்கான சர்வதேச சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இதற்கு முன்பாக 2 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளின்போதும் இதேபோன்று ரசிகர்கள் இன ரீதியாக வீரர்களை விமர்சித்த விவகாரத்தில் ரஷ்ய கால்பந்து சம்மேளனத்துக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**