{ Free food showing finger Malaysia }
மலேசியா, இன்று யாரெல்லாம் வாக்களித்து விட்டார்களோ, தங்களின் மை விரலைக் காண்பித்தால், அவர்களுக்கு இலவச உணவை விநியோகிக்கின்றார், தான் ஸாவ் மிங் என்பவர்.
பாசீர் பிஞ்சியிலுள்ள கின் ஃபாத் உணவு விடுதியில் கடைப் போட்டிருக்கும் இந்த 25 வயது இளைஞர், இவ்வாறு தனது நாட்டுப் பற்றை வெளிப்படுத்துகின்றார்.
இன்று காலை மணி 10 முதல், அவரது கடையில் இந்த இலவச உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
“ஏதாவது மூன்று வகை உணவு, சீன தேநீர் அல்லது வெறும் தண்ணீரை இங்கே பெற்றுக் கொள்ளலாம். ஆனால், உணவைக் கடையில்தான் சாப்பிட வேண்டும். வீட்டுக்கு எடுத்துப் போக முடியாது” என்றார் அவர்.
மேலும், “வேலைக்குச் செல்வோருக்கு இந்த இலவச உணவை வழங்குவதற்காக நானும் என் நண்பரும் எண்ணியிருந்தோம். இதை அறிந்து, பலரும் சமையலுக்குத் தேவையான பொருட்களை வழங்கி ஆதரவளித்தனர்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈராயிரம் பேருக்கு இலவச உணவை வழங்குவதே தனது இலக்கு என கூறியுள்ளார்.
Tags: Free food showing finger Malaysia
<< RELATED MALAYSIA NEWS>>
*மலேசியாவில் 61 வீதத்தினர் இதுவரைக்கும் வாக்களித்துள்ளனர்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!
*மஇகா தேசியத் தலைவர் வாக்களித்தார்..!
*மலேசியப் பொதுத் தேர்தல்: புக்கிட் பிந்தாங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது..!
*மலேசியாவில் வாக்களிப்பு வரிசையில் நின்றுகொண்டிருந்த முதியவர் உயிரிழந்துள்ளார்..!
* மக்கள் தேசிய முன்னணிக்கே வாக்களிப்பர்: நஜிப் நம்பிக்கை..!
*இன்று மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல்; 14,449,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்!
*நஜிப்பின் கோட்டைக்குள் புகுந்து பிரசாரம் செய்யும் மகாதீர்..!
*அஞ்சல் வாக்குகள் எவ்வளவு என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்..! -நூருல் இஸ்ஸா
<<Tamil News Groups Websites>>