23 பேருக்கு பதவி நியமன கடிதங்கள்

0
593
north province chief minister reginold coore latest Tamil news

north province chief minister reginold coore latest Tamil news
வடமாகாணத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக தெரிவுசெய்யப்பட்ட 23 பேருக்கான நியமனக் கடிதங்களை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வழங்கினார்.

சுண்டுக்குளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில்இந்த நிகழ்வு நடைபெற்றது.

வடமாகாணத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான தேர்வுகள் ஏற்கனவே நடைபெற்று 197 பேர் தெரிவாகியிருந்தனர்.

அவர்களில் 166 பேர் மட்டுமே பயிற்ச்சிக்கான கடமைகளை பெற்றிருந்தனர். இந்நிலையில் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் ஆளுநரின் விசேட அனுமதியுடன் இந்த நியமனங்கள் இன்று வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் ஆளுநரின் செயலர் இளங்கோவன் உதவிச் செயலர் ஏ.எக்ஸ் செல்வநாயகம் பிரதிபிரதம செயலாளர் நிர்வாகம் திருமதி எஸ்.மோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
north province chief minister reginold coore latest Tamil news

More Tamil News

Tamil News Group websites :