மே தினக் கூட்டங்கள் இன்று : மட்டக்களப்பில் ஜனாதிபதி

0
689
May day today

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி, மாவடி வேம்பில் இன்று (07) நடைபெறவுள்ளது.

தேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி என்பதே இதன் தொனிபொருளாகும்.

மக்கள் விடுதலை முன்னணியின் மேதின கூட்டம் வழமை போன்று கொழும்பு பீ.ஆர்.சி விளையாட்டு மைதானத்தில் இன்று (07) பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

அத்துடன் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் காலி சமனல விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயின் மேதின கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தலைமையில் இன்று காலை கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கொழும்பு பொது நூலகத்திற்கு அருகில் ஆரம்பமாகும் ஊர்வலம் புதிய நகர மண்டபத்தை சென்றடையும் அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் நடத்தும் மே தினக் கூட்டங்கள், இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளன.