மன்னாரில் மின்னல் தாக்கம் ; மூன்று வீடுகள் சேதம்

0
637
Lightning impact Mannar Three houses damaged

(Lightning impact Mannar Three houses damaged)
மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக 03 வீடுகள் சேதமாகிய நிலையில், வீடுகளில் இருந்த அனைவரும் எந்தவிதப் பாதிப்பும் இன்றி உயிர் தப்பியுள்ளனர்.

இன்று அதிகாலை ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் 03 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உடமைகளும் சேதமடைந்துள்ளன.

குறித்த வீடுகளில் உள்ள பெறுமதியான மின் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதோடு, வீட்டு மின் இணைப்புக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

எனினும் உடமைகளுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்ட போதும், உயிர் ஆபத்துக்கள் எவையும் ஏற்படவில்லை.

இதனையடுத்து மாவட்ட பொலிஸார், இராணுவத்தினர், பிரதேச செயலக அதிகாரிகள், அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வீடுகளுக்குச் சென்று சேத விபரங்களை அறிந்து கொண்டனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Lightning impact Mannar Three houses damaged