ஜனநாயக இளைஞர் இணையத்தின் செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்

0
736
Important Resolutions Democratic youth net Executive Meeting

(Important Resolutions Democratic youth net Executive Meeting)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின 18 அம்ச கோரிக்கைகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட தாம், அவற்றை வென்றெடுப்பதற்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயார் என ஜனநாயக இளைஞர் இணையத்தின் செயற்குழு தெரிவித்துள்ளது.

ஜனநாயக இளைஞர் இணையத்தின் செயற்குழுக் கூட்டம் நேற்றைய தினம் கூடிய போதே முக்கிய தீர்மானங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அத்துடன், இந்தச் செயற்குழு கூட்டத்தில் சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பாக சில முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அந்த வகையில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணையத்தின் பங்கு எந்த வகையில் அமையப் போகிறது என ஆராயப்பட்டது.

மேலும், வெகுவிரைவில் இணையத்துக்கென காரியாலயம் ஒன்றை திறப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அத்துடன், ஜனநாயக இளைஞர் இணையத்தின் செயற்குழு செயலாளராக இணையத்தின் பிரதித் தலைவரும், ஸ்தாபக செயலாளருமாகிய ஜெ. நிரோஷ்காந்த் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், ஐந்து வருடங்களுக்கு முன்னர் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பின் செயலாளர் பதவியை மீண்டும் தன் மீது நம்பிக்கை வைத்து வழங்கியமைக்காக நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

செயலாளர் என்ற வகையில் சமூக நலன் சார்ந்த செயற்பாடுகளுக்காக இணையத்தை முன்னோக்கி நகர்த்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டத்தின் இடையே ஜனநாயக இளைஞர் இணையத்தில் ஒருமித்த முற்போக்கு கூட்டணியின் கொழும்பு மாநகர சபை, தெமட்டகொடை வட்டார வேட்பாளர் பாலையா பாலசுந்தரம் இணைந்துகொண்டார்.

இவருக்கான அங்கத்துவ நியமன பத்திரம் இணைய தலைவர் ஆ. சஜீவானந்தனால் வழங்கப்பட்டது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியில் இருந்து ஒருவர் இணைந்து கொண்டமை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில், பாலையா பாலசுந்தரம், தமக்கு மக்கள் சேவை செய்வதற்கான தளமும், களமுமே தேவை என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தின் அழைப்பை ஏற்று வருகை தந்து அரசியல் தலைமைத்துவம் தொடர்பில் உரையாற்றி சிறப்பித்த புத்தி ஜீவிகளான எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், எழுத்தாளரும் சட்டத்தரணியுமான இரா. சடகோபன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜூடன் இந்தியாவிலிருந்து வருகை தந்த தமிழ் காவிரி சஞ்சிகையின் தமிழகன், இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமை இயக்க நிர்வாகி மலர் மன்னன் ஆகியோருக்கு இணையம் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Important Resolutions Democratic youth net Executive Meeting