முறைப்பாடு கொடுக்கவரும் பெண்களிடம் பாலியல் உறவில் ஈடுபட்டு வந்த பொலிஸ் அதிகாரி கைது!

0
228
Tirunelveli district police have arrested chief police officer been sexually assaulted women complain complainant.

(women complain complainant)

முறைப்பாடு கொடுக்க வரும் பெண்களிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் உறவில் ஈடுபட்டு வந்த தலைமை பொலிஸ் அதிகாரி ஒருவரை தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்ட பொலிஸார் கைது செய்துள்ளர்.

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் தென்காசி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாவூர்சத்திரம் சீர்மிகு பொலிஸ் நிலையத்தில் தலைமை பொலிஸ் அதிகாரியாக பணிபுரிந்து வரும் நடராஜன் என்பர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு மனு கொடுக்க வரும் பெண்களிடம் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக் கொண்டு ‘இரவினில் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதாகவும் அதற்கு குறிப்பிட்ட தொகை பணம் வேண்டும் இல்லையெனில் இரவினில் தன்னுடன் உறவில் ஈடுபட வேண்டும்” எனவும் ஆசை வார்த்தை கூறி தனது ஓய்வு அறைக்கு வரவழைத்து பாலியல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த சம்பவத்தால் அப்பகுதியிலுள்ள பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளரிடம் பலமுறை முறைப்பாடு செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு பொலிஸ் அதிகாரியான நடராஜன், இரவில் ஓர் பெண்ணை அழைத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.

ஏற்கனவே கோபத்திலிருந்த மக்களுக்கு இதனை கண்டு ஆத்திரமடைந்தனர்.

இதனையடுத்து, நடராஜன் வீட்டு முன் திரண்ட மக்கள், அவரை பிடித்து தாக்கியதுடன், அரை நிர்வாணமாக இருந்த நடராஜனையும் உடனிருந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

ஆனால், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மீண்டும் இதே பொலிஸ் நிலையத்தில் நடராஜன் பணிபுரிந்தால் வீதி மறியல் மற்றும் தொடர் போராட்டங்களையும் நடத்தப் போவதாகவும் பொதுமக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். (women complain complainant)

Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here