அமைச்சு பதவி கிடைக்க முதலில் கொள்ளையடித்து இருக்க வேண்டும் : ரஞ்சன் அதிரடி கருத்து

0
655

(Ministry post qualification ranjan ramanayake)

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக இருப்பதற்கு பிரதான தகைமையாக, ஊழல்மோசடிகளுடன் தொடர்புப்பட்டிருக்க வேண்டும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

“நான் எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டுக்களுடனும் தொடர்புப்படவில்லை அதனால் எனக்கு பிரதியமைச்சு பதவியே வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருக்க வேண்டும் என்றால், ஊழல்மோசடி செய்திருக்க வேண்டும் என்பதே முக்கிய தகைமையாக இருக்கின்றது.”

கடந்த ஆட்சியாளர்க​ளைவிட தற்போதைய ஆட்சியாளர்கள் ஊழல்மோசடிகளை இல்லாது செய்ய சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவையும் நூறு சதவீதம் முழுமை பெறவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:Ministry post qualification ranjan ramanayake, Ministry post qualification ranjan ramanayake