குவைத் பொலிஸாரின் அதிரடி சோதனை!

0
776
Kuwait police raid Tamil world news

(Kuwait police raid Tamil world news)

குவைத் போலீஸ் அதிகாரிகள் 30-04-2018 மற்றும் 01-05-2018 இரண்டு நாட்கள் நடத்திய அதிரடி 1184 வழக்குகள் பதிவு.

குவைத் பொது பாதுகாப்புக்கான குவைத் உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் Ibrahim Al Tarah மேற்ப்பார்வையில் குவைத் முழுவதும் 118 இடங்களில் 30-04-2018 மற்றும் 01-05-2018 இரண்டு நாட்கள் சோதனை சாவடிகள் அமைத்து சோதனை நடைபெற்றது.

அதன்படி 145 கிரிமினல் மற்றும் குற்றவியல் வழக்குகள்,
சிவில் மற்றும் ஆவணங்கள் இல்லா 244 வழக்குகள்,தேடப்பட்ட வாகனங்கள் மீதான 7 வழக்குகள், போதை மருந்து வழக்குகள் 14, மதுபான வழக்குகள் 4, திருட்டு சம்பந்தமாக 3 வழக்குகள்,வீதிகளில் உறிய ஆவணமின்றி பணி மேற்கொண்டவர் மீது 10 வழக்குகள், 652 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள்,

வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட 57 வழக்குகள் உட்பட 1184 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குவைத் உள்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் பாதுகாப்பு கருதி சோதனைகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Kuwait police raid Tamil world news)

Tamil News Groups Websites