இன்று பாரிஸில் விமான சேவைகள் ரத்து!

0
1406
Air France Flight Cancellation Thursday

இன்று (மே 3), ஏர் பிரான்ஸ் தனது விமானங்களில் 15 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஏர் பிரான்ஸ் ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான வேலை நிறுத்த ஆர்பாட்டங்களால் இவ்வாறு ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறுகிறது. Air France Flight Cancellation Thursday
இதனால், ஏர் பிரான்ஸின் 85 சதவீத விமானங்கள் சேவையில் இருக்கும். இதில் 78 சதவீத நீண்ட தூர விமானங்களும், பரிஸிலுள்ள சார்லஸ் டி கோளே விமான நிலையத்திலிருந்து 80 சதவீதத்திற்கும் அதிகமான விமானங்களும் மற்றும் அதன் குறுகிய தூர பயண விமானங்களில் 90 சதவீதமான விமானங்களும் இயங்கும்.

ஏர் பிரான்ஸ் அதன் வாடிக்கையாளர்களை, புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் தமது விமானங்கள் பற்றிய தகவலை அதன் வலைத்தளத்தில் சரிபார்க்க அறிவுறுத்தியுள்ளது.

நிறுவன தலைவர்கள் தற்போது ஊழியர்களுடன் ஆலோசனையை தொடங்குவதன் மூலம் தடையை முடிவுக்கு கொண்டு வர இருக்கின்றனர்.

இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் இன்று மாலை இடம்பெற இருக்கிறது.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**