அடிப்படைவாத முஸ்லிம்களின் அடாவடிக்கு அடிபணியுமா இந்து பாரம்பரியம்?

11
1397
Trincomalee Shanmuga Hidu Ladies College Muslim Dress Code

(Trincomalee Shanmuga Hidu Ladies College Muslim Dress Code)

இலங்கை முஸ்லிம் மக்கள் கடைப்பிடித்து வரும் இஸ்லாமிய அடிப்படைவாத கலாச்சார முறைகளால் தொடர்ச்சியாக சர்ச்சை நீடித்து வருகின்றது.

அபாயா போன்ற அடிப்படை வாத உடை கலாச்சாரம் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் சரியான முடிவு ஒன்றுக்கு வர வேண்டும் என பல தரப்புகளும் கோரி வரும் சூழலில் திருகோணமலையில் முஸ்லிம் அடிப்படை வாதிகள் தமது கைவரிசையை காட்டியுள்ளமை மிகவும் கண்டிக்கத்தக்கது.

இந்து பாரம்பரியம்மிக்க திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் அபாயா அணிந்து வந்த முஸ்லிம் ஆசிரியைகள் தொடர்பில் கல்லூரி அதிபர் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பிலேயே இந்த சர்ச்சை வெடித்துள்ளது.

இதனையடுத்து , கடந்த வாரம் பாடசாலைக்குள் அத்துமீறி முஸ்லிம் ஆசிரியைகளின் கணவன்மார் மற்றும் சம்பந்தமற்ற சிலர் பாடசாலை அதிபரை எச்சரிக்கை விடுக்கும் தொனியில் நடந்துகொண்டுள்ளனர்.

பாடசாலைக்குள் உட்புகுந்த குறித்த முஸ்லிம் ஆசிரியையின் கணவன் ‘அவா அப்படி தான் வருவார். உங்களால் முடிந்ததை பாருங்கள்’ என அதிபரை மிரட்டியுள்ளார்.

அதுமட்டுமன்றி ,முஸ்லிம் ஆசிரியைகள் ஆரம்ப பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இது தமிழ் மாணவர்களின் மொழி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆசிரியர்களுக்கென்று விதிக்கப்பட்டுள்ள ஒழுக்கக்கோவையின்படி ஆசிரியைகள் சேலை கட்டுதல் அவசியம். சிங்கள ஆசிரியைகளாயின் அவர்களுக்கேற்ற பாணியில் சேலை கட்டலாம். தமிழ் ஆசிரியைகளாயின் அவர்களுக்கேற்ற பாணியில் கட்டலாம்.

முஸ்லிம் ஆசிரியைகளாயின் அவர்களுக்கேற்ற பாணியில் கட்டலாம். ஆனால் சேலைதான் கட்டவேண்டும். இதில் முஸ்லிம்களின் கலாசாரத்தை மதித்து அந்த ஆசிரியைகளுக்கென்று மேலதிகமாக வழங்கப்பட்ட வரப்பிரசாதம் என்னவெனில், சேலை மேற்சட்டையின் கையினை நீளமாகவோ முக்காலாகவோ அல்லது அவர்கள் விரும்புகின்ற விதத்திலோ அணியலாம் என்பதுடன் தலை முடியை மறைப்பதற்காக முக்காடும் அணியலாம்.

இவற்றையும் தாண்டி அபாயா போன்ற அடிப்படைவாத உடைகளை இந்து பராம்பரிய பாடசாலையில் திணித்தல் என்பது அடிப்படைவாத முஸ்லிம்களின் அடாவடி செயலே.

இந்த விடயத்தில் இந்து அமைப்புகள் ஒன்றாக ஒற்றுமையுடன் செயற்பட வேண்டியது கட்டாயமான விடயமாகும்.

 

ஏனைய செய்திகள்

கூகிள் நிறுவனத்தின் “தலைவர் பிரபாகரனுக்குரிய அங்கீகாரம்” இலங்கை அரசின் பொய்ப்பிரச்சாரத்துக்கு விழுந்த அடி!

முஸ்லிம்களின் காட்டி கொடுப்புக்கு இலங்கை அரசின் கைமாறு கலவரமா?

முஸ்லிம் அரசியல்வாதிகளின் வாய்வீரத்துக்கு பலிகொடுக்கப்படும் முஸ்லிம்களின் எதிர்காலம்!

கழுத்து வெட்டி பிரிகேடியரும் நல்லாட்சி அரசும் தமிழர்களுக்கு சொல்லி இருக்கும் செய்தி என்ன?

 

பிற தளங்கள்

Tamilworldnews.com

தொழினுட்பம்

சமுகவளைத்தள பக்கங்கள் 

நெற்றிக்கண் முகப்பு