அமைச்சரவை அனுமதியில்லாமல் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை – விமல் குற்றச்சாட்டு

0
547
national freedom alliance leader wimal weeravangsa challenge sajith premadasa

(tamilnews wimal weerawansa claims new cabinet appointment)

அமைச்சரவை மாற்றங்கள் ஊடாக மாத்திரமே நல்லாட்சி அரசாங்கம் தனது செயல்திறனை வௌிக்காட்டியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சரவை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விமர்சனத்தை வௌியிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த நாள் தொடக்கம் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது்

அதனை முன்னேற்ற எந்த நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அமைச்சரவையின் அனுமதியின்றி சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை அரசாங்கம், கைச்சாத்திட்டுள்ளதாக விமல் வீரவங்ச குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை மக்கள் பெப்ரவரி 10 ஆம் திகதி தற்போதைய அரசாங்கத்திற்கு ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சி என வரைந்த கோட்டை அழித்து “20 வது அரசியலமைப்பு திருத்தம்” எனும் அரசாங்கத்திற்கு பயன்மிக்க வகையில் பிளவு கோட்டை வரைவதற்கு ஜே.வி.பி முயற்சித்து வருகிறது.

குற்றுயிராக இருக்கும் அரசாங்கத்திற்கு இந்த விடயம் ஓட்சிசன் வழங்கும் செயற்றிட்டம் மாத்திரமேயன்றி மக்களுக்கான தீர்வாக அமையாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

(tamilnews wimal weerawansa claims new cabinet appointment)

More Tamil News

Time Tamil News Group websites :