மில்கோ நிறுவனத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டகலையில் ஆர்ப்பாட்டம்

0
650
tamilnews kotagala milk producers protest front milko

(tamilnews kotagala milk producers protest front milko)

கொட்டகலையில் அமைந்துள்ள மில்கோ நிறுவனத்தின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கொட்டகலை பிரதேச பால் உற்ற்பத்தியாளர்களான கால்நடை வளர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த போராட்டம் கொட்டகலை மில்கோ பசும்பால் சேகரித்து பதணிடும் நிறுவனத்தின் வளாகத்தில் இன்று மாலை இடம்பெற்றது.

இதில் பிரதேசத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கொட்டகலை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் தாம் தினமும் சேகரிக்கும் பசும்பாலை மில்கோ நிறுவனத்திற்கே வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு வழங்கப்படும் ஒரு லீட்டர் பாலுக்கு அதன் தரத்திற்கேற்ப 54 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையிலான தொகையை மில்கோ நிறுவனம் மாதம் இருமுறை வழங்கி வந்துள்ளது.

இருந்த போதிலும் நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பித்த காலம் தொட்டு பசும்பாலூக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அதாவது 15 நாட்களுக்குரிய பணத்தை மாத்திரம் வழங்கி வருகின்றனர்.

இதனால் கால்நடைகளை பராமரிப்பதற்காக புண்ணாக்கு மற்றும் ஏனைய சத்துணவுகளை பெற்றுகொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டு வருவதால் மில்கோ நிறுவனத்தின் இந்த செயல்பாட்டை எதிர்த்து போராட்டத்தில் ஈடுப்பட்டதாக போராட்டகார்கள் தெரிவித்தனர் .

அதேவேளை, ஒரு மூட்டை புண்ணாக்கின் விலை மூவாயிரம் தொடக்கம் நான்காயிரம் ரூபாய் வரை கொடுத்து கொள்வனவு செய்வதாகவும் பணமில்லாத காரணத்தால் தனியார் கடைகளில் கடனுக்கு வாங்க வேண்டிய நிலையில் பாரிய கடன் சுமைக்கும் தாம் ஆளாகி வருவதாகவும் பால் உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே, பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள கொட்டகலை பிரதேச மக்களின் நலனை கருத்திற்கொண்டு பாலுக்கான முறையாக பணம் வழங்கவும், முறையாக கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கையும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

(tamilnews kotagala milk producers protest front milko)

More Tamil News

Time Tamil News Group websites :