பல பெண்கள் வாழ்வில் விளையாடிய ‘ஹார்வி வைன்ஸ்டீன்’

0
786
Harvey Winestein

Harvey Winestein

பாலியல் குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்படும் ஹொலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் தொடர்பான திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது.

நடிகரும், தயாரிப்பாளருமான பிராட் பிட்டின் ‘ப்ளான் பி’ நிறுவனமும் , வேறொரு இஅதனை இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கவிருக்கின்றன. அதற்கான உரிமைகளையும் அவை பெற்றுள்ளன.

வைன்ஸ்டீனைச் சூழ்ந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகளில் மட்டுமே திரைப்படம் கவனம் செலுத்தாது, அவருடைய குற்றச் செயல்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய செய்தியாளர்களின் கதையை முக்கியமாகச் சித்திரிக்கவுள்ளது இந்தத் திரைப்படம்.

நியூயோர்க் டைம்ஸ் நாளிதழின் செய்தியாளர்கள் இருவர் எவ்வாறு சவால்களைக் கடந்து வைன்ஸ்டீனைப் பற்றிய செய்தியை வெளியிட்டனர் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.